ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

0 795

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சிஆர்பிஎப் வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்-பாரமுல்லா சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் காலை 5 மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் 3 பேர் திடீரென சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய பதிலடியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பயங்கரவாதி காயத்துடன் பிடிபட்டான். சண்டையில் பிகாரை சேர்ந்த ரமேஷ் ரஞ்சன் என்ற வீரர் தலையில் குண்டுபாய்ந்து வீரமரணம் அடைந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments