ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் முறைகேடு -காவலர் சித்தாண்டியிடம் விசாரணை மேற்கொண்டதில் தகவல்

0 1216

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டியிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரூப்2ஏ மற்றும் குரூப்4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை ஆயுதப்படையில் பணி புரிந்து வந்த காவலர் சித்தாண்டி என்பவரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து  அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை 5 ஆண்டுகளாக தெரியும் என்றும், தேர்வர்களுக்கான பணத்தை பெற்று தருவது மட்டுமே தனது வேலை எனவும் சித்தாண்டி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. மோசடி  செய்து கிடைத்த பணத்தில் சிவகங்கை மாவட்டத்தில் சித்தாண்டி சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments