மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள்

0 2270

சேலத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்த ஹரி, மனைவி தவமணி மற்றும் மகளுடன் திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு 2ம் தேதி திரும்பினார். வீட்டு வாசலில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் 2 குழந்தைகளுடன் வந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென மோதியதில், அதன் சக்கரத்தில் தவமணி சிக்கிக் கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தவமணியையும், பிறரையும் மீட்டனர். தவமணி காலில் 16 தையல்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரை அரசு ஊழியர் கமலக்கண்ணன் என்பவர் குடிபோதையில் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments