ஏஜிஎஸ் குழும உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை

0 1639

நடிகர் விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பான தகவலை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியிலுள்ள ஏஜிஎஸ் குழும உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமானவரி புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

image

திருட்டு பயலே, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ள ஏஜிஎஸ் குழுமம், அண்மையில் விஜயின் பிகில் திரைபடத்தையும் தயாரித்து விநியோகித்திருந்தது. இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து, அக்குழுமம் தொடர்புடைய திரையரங்குகள் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரி புலனாய்வுத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடங்களிலும் வருமானவரி புலனாய்வு துறையினர் பல குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments