பெல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டமில்லை : மத்திய அரசு

0 668

திருச்சி, போபாலில் ஆலைகளை கொண்டு செயல்படும் பெல் (BHEL) நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெல் எனப்படும் பாரத் ஹெவி எலெக்ட்ரீகல்ஸ் (Bharat Heavy Electricals ) நிறுவனத்தின் ஆலைகள், திருச்சி, போபால் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. அதிக அளவில் கனரக மின் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக திகழும் பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதா என்று மக்களவையில் 2 எம்.பி.க்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்கு மத்திய கனரக ஆலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை (heavy industries and public sector enterprises) அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அளித்துள்ள பதிலில், பெல் நிறுவனத்தை தற்போதைக்கு தனியார்மயமாக்கும் திட்டமில்லை எனவும், மத்திய அரசால் தனியார்மயமாக்க பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில் அந்நிறுவனம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments