கொரோனா நோய் தடுப்பு காவல் மையங்கள் : நெஞ்சை உலுக்கும் பல தகவல்கள்
கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நோய் தடுப்பு காவல் மையங்களுக்கு செல்வதை விட வீட்டில் இருந்தே உயிரை விட்டு விடலாம் என சீனாவின் ஊகான் நகர மக்கள் கூறுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனாவைரஸ் தாக்குதலுக்குப் பிறகு முதன்முதலாக அந்த நகரைச் சேர்ந்த வாங் என்ற குடும்பத்தலைவியின் பேட்டியில் நெஞ்சை உலுக்கும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. குவாரன்டைன்களில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏதாவது மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதாகவும், நோய் முற்றிய நிலையில் மரணத்தோடு போராடுபவர்களுக்கு அங்கு படுக்கை வசதி கூட இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
தனது நெருங்கிய உறவினர்கள் பலரை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ள இவர், தேவையான அளவுக்கு நோய் தொற்றை கண்டறியும் உபகரணங்களும், மருத்துவ வசதிகளும், தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களும் நோய் தடுப்பு காவல் மையங்களில் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்
Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8
Comments