மாணவர்கள் நலன் கருதி 5, 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்

0 708

மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த நிலை தொடரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன், பயனாளிகளுக்கு ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு மற்றும் கடனுதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி எந்த எதிர்க்கட்சியும் போராட்டம் நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments