முஸ்லீம்களை அடைத்து வைக்க எந்த தடுப்புக்காவல் மையங்களும் அமைக்கவில்லை - மத்திய அரசு
அஸ்ஸாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் மையமும் கட்டப்படவில்லை என்று மத்திய அரசு மக்களவையில் அறிவித்துள்ளது.
உறுப்பினர் பிரதயுத்தின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் , வேறு எங்கும்கூட இத்தகைய தடுப்புக் காவல் மையங்கள் கட்டப்படவில்லை என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை முறைப்படுத்தவும் பாகிஸ்தான் ,வங்கதேசம், ஆப்கான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கவும்தான் அரசு இச்சட்டங்களைப் பயன்படுத்தும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8
Comments