ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கலாம் - மத்திய அரசு
ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு எடுத்துள்ள முடிவில் தலையிடப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் இது குறித்த தெலுங்கு தேசம் எம்பி. ஜெயதேவ கல்லாவின் கேள்விக்கு பதிலளித்த அரசுத் தரப்பு, மாநில தலைநகரங்களை முடிவு செய்வது மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரமாகும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர அரசுக்கு எந்த வித அறிவுறுத்தலும் அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினம், கர்நூல், அமராவதி ஆகிய மூன்று நகரங்களை நிர்வாக காரணங்களுக்காக மூன்று தலைநகரங்களாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8
Comments