தரமற்ற பொருட்கள் விற்கபடுவதை தடுக்க சமூக ஆர்வலர் எடுத்த முயற்சி
சேலம் பேருந்து நிலையத்தில் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக சமூக ஆர்வலர் ஒருவர் கடை கடையாக ஏறி பொருட்களை வாங்கினார்.
ராதாகிருஷ்ணன் என்ற அந்த சமூக ஆர்வலர், சேலம் பேருந்து நிலையத்தில் தரமற்ற, காலாவதியான உணவுப் பொருட்கள் 2 மடங்கு விலை வைத்து விற்கப்படுவதாகவும் தனியார் பேருந்துகளில் விதிகள் மீறப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய கடை கடையாக ஏறி அவர் வாங்கிய நொறுக்குத் தீனிகளுக்கு ரசீதுகள் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலானவை காலாவதியாகியும் இருந்தன. அங்கிருந்த தனியார் பேருந்து ஒன்றில் ஏறி பார்த்தபோது காலியான முதலுதவிப் பெட்டி, பேட்ஜ் அணியாத நடத்துனர், ஏர்ஹாரன் என விதிமீறல்கள் காணப்பட்டன.
Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8
Comments