ஜெர்மனியின் முனீச் நகரில் பாதுகாப்பு மாநாட்டில் CAA விமர்சனத்திற்கு ஜெய்சங்கர் பதிலளிப்பார்
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்க உள்ளார்.
ஜெர்மனியின் மூனிச் நகரில் வருகிற 14 முதல் 16ந் தேதி வரை பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்கும் இக்கூட்டத்தில் தீவிரவாதம் முக்கியப் பிரச்சினையாக விவாதிக்கப்பட உள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் குறித்த பிரச்சினையும் எழுப்பப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் ஜெய்சங்கர், குடியுரிமை சட்டம் மற்றும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்.
இதனைத் தொடர்ந்து, பிரசல்ஸ் செல்லும் ஜெய்சங்கர், 17ந் தேதி நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் பங்கேற்று இந்தியா மீதான விமர்சனங்களுக்கு பதிலளிப்பார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரம் என இந்தியா ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
Comments