Smart City-ஆக மாறும் தூத்துக்குடி..! மக்கள் கருத்துகளுக்கு வரவேற்பு

0 1598

தூத்துக்குடியை சீர்மிகு நகரமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேவைப்படும் வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் சீர்மிகு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால் வசதி, பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்கும். நகரின் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு குறித்த கணக்கெடுப்பு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் விளக்கினார்.

மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகிய 30 முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட உள்ளன என்றும் அதில் உள்ள கியூ.ஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தோ, இணையதள பக்கத்துக்கு சென்றோ மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments