முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து வெற்றி...

0 3261

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக இளம்வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் 103 ரன்களும், கே.எல். ராகுல் 88 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 348 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் விளையாடிய நியூசிலாந்த் அணி, ஆரம்பத்தில் திணறினாலும் பின்னர் அதிரடியில் ஈடுபட்டு மிரட்டியது. டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்களும், லாதம் 48 பந்துகளில் 69 ரன்களும் குவிக்க, 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 348 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் நியூசிலாந்த் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆக்லாந்தில் வரும் 8ம் தேதி 2ஆவது போட்டி நடைபெறவுள்ளது.

Watch Polimer News Online : https://bit.ly/31rVwr8

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments