பாஜக வேண்டுமா அல்லது எதிர் கட்சிகள் வேண்டுமா ! பிரதமர் மோடி

0 2002

குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கான 370 வது அந்தஸ்து ரத்து உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்த பாஜக வேண்டுமா அல்லது வாக்கு அரசியலுக்காக மக்களை இதற்கு எதிராக தூண்டும் கட்சிகள் வேண்டுமா என்று பிரதமர் மோடி மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்றது. இதை ஒட்டி டெல்லி துவாரகாவில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய மோடி, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தாமல் டெல்லி ஆம் ஆத்மி அரசு மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி அரசின் அலட்சியத்தால், 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை கிடைக்கக்கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லிவாசிகள் இழந்து விட்டதாகவும் மோடி கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments