தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்குவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரித்து, பால்வளத் துறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாவட்ட அளவிலான ஆவின் மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் பொருட்களின் வெளிநாட்டு ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் பால் வளத்துறையின் வருமானத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்டவை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Comments