தொல்லியல் ஆய்வில் பண்டைய கால பொருட்கள் கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் பழங்கால தமிழர்களின் அணிகலன்களும், மண்பாண்டங்களின் உடைந்த பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள குருவம்பட்டி கிராமத்தில் சோழர்கால சிவ லிங்கம், நீர்பாசன அடவுத்தூண், கிணறு ஆகியவை உள்ளது.
அப்பகுதியில் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டதில் பல தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கருப்பு சிவப்பு நிற மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல்கள், சங்கு வளையல்கள், பவளமணி, வெண்ணிற பவளம், நூல் கோர்க்க பயன்படும் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மண் பானைகள், கிண்டி எனப்படும் நீர்க்குடுவையின் உடைந்த பாகங்கள், மனித உருவத்தை சிற்பமாக செய்யப்பட்ட ஓடுகள், ஓவிய குறியீடுகள், தராசு உருவம், பிராமிய எழுத்துக்கள் கொண்ட குறியீடுகளும் ஆய்வில் கிடைத்துள்ளன.
Comments