பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி - வெட்டிக் கொலை

0 1298

விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு காலையில் பெட்ரோல் நிரப்ப ஒரு கார் வந்தது. காரில் இருந்து இறங்கிய நபர் தண்ணீர் அருந்தச் செல்வதாகக் கூறிவிட்டு, பெட்ரோல் பங்க்கின் அலுவலகப் பகுதிக்குச் சென்றார். இந்நிலையில் அலுவலகப் பகுதியில் கேட்ட திடீர் சத்தம் புகை மண்டலத்தை அடுத்தும் ஊழியர்கள் அங்கு விரைந்த போது மேலாளர் சீனிவாசனை அந்த நபர் சரமாரியாக கத்தியால் வெட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர்.

 பின்னர் காரில் வந்தவர்களும் பெட்ரோல் பங்க் அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தவர்களும் தப்பியோடினர். பெட்ரோல் பங்க் உரிமையாளரான பிரகாஷை சில மாதங்களுக்கு முன் அசார் என்பவர் 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி வந்த நிலையில், இந்தக் கொலை நடந்திருப்பதாக பெட்ரோல் பங்க் ஊழியர் தெரிவித்தார்.

 மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கக் கூடும் என்றும் சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments