தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கைகளை அசைத்த டிரம்பின் செயலால் சர்ச்சை

0 1348

அமெரிக்க நாட்டுப் பண் இசைக்கப்பட்ட போது, திடீரென கை-கால்களை அசைத்த அதிபர் டொனல்டு டிரம்பின் நடவடிக்கை, சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இந்நிகழ்வு குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, விவாதங்களையும் எழுப்பியுள்ளது. புளோரிடாவின் (Florida) வெஸ்ட் பாம் பீச் (West Palm Beach) பகுதியில், சூப்பர் பவுல் தேசிய கால்பந்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை கண்டுகளித்த பின் நடைபெற்ற நிகழ்வின்போது, அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Trump caught mocking the National Anthem during the #SuperBowl.

Since we know the GOP takes a zero-tolerance stand against any display of disrespect toward the flag, I expect the right will be offering a full-throated condemnation.

...Any day now.pic.twitter.com/lMcwYfkPog

— Brian Tyler Cohen (@briantylercohen) February 3, 2020 ">

அப்போது, அமெரிக்க மரபுபடி, அனைவரும், நெஞ்சில் ஒரு கையை வைத்திருக்க, அதிபர் டிரம்ப், திடீரென கைகளை அசைத்து, இசைக்கலைஞர்களை ஒருங்கிணைப்பது போல், பாவனைகள் செய்த நிகழ்வு, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments