தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு எதிராக கைது வாரண்டு
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு (Jacob Zuma) எதிராக கைது வாரண்ட்டை அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபராக 2009 முதல் பதவி வகித்த ஜூமா, ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் 2018ம் ஆண்டு ராஜிநாமா செய்தார்.
பிரான்ஸ் நிறுவனத்திடம் ஆயுதம் வாங்க செய்த ஒப்பந்தத்தில் ஊழல் புரிந்ததாக அவருக்கு எதிராக பீட்டர்மெரிட்ஸ்பர்க் உயர்நீதிமன்றத்தில் (Pietermaritzburg High Court) வழக்கு நடைபெறுகிறது. இதன்மீதான விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமால் தவிர்த்ததால், ஜூமாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments