வெறிச்சோடி காணப்படும் ராஜராஜ சோழன் சமாதி
தமிழர்களின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் அந்த கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சமாதி உள்ளதாக கூறப்படும் இடம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் அருகே உடையாளூரில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் தஞ்சையில் ராஜ ராஜ சோழனுக்கு சதய விழா நடத்தப்படும்போது உடையாளூருக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ’
தற்பொழுது விமர்சையாக பெரிய கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று வரும் நிலையில் ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பதாக கூறப்படும் இடத்தை யாரும் கண்டுக் கொள்ளாதது அதிருப்தி அளிப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
Comments