பிறந்த 6 நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்

0 1512

பிறந்து 6 நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் பெரியண்ணன் - சரளா தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 5-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்மூபட்டது.

இதையடுத்து சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு கடந்த 11-ம் தேதி சிறப்பு மருத்துவக் குழு மூலம் குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டடது.

தொடர்ந்து 22-ம் தேதி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் குழுவினர் மேற்கொண்ட 5 மணி நேர அறுவை சிகிச்சையில் கட்டி அகற்றப்பட்டு, குழந்தை தற்போது முழு உடல்நலத்துடன் உள்ளது என மருத்துவக்கலூரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments