பட்ஜெட் குறித்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மத்திய பட்ஜெட் குறித்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெறும் நிலையில், பாஜக நாடாளுமன்ற குழுக் (parliamentary party meet) கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை சிறந்த பட்ஜெட் என மக்கள் புரிந்து கொண்டு விட்டதாகவும், மத்திய அரசை தொடர்ந்து கூறை குறுவோர்கள் கூட, உலக பொருளாதார சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறந்த பட்ஜெட் அது என ஒப்புக் கொண்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜே.பி. நட்டா கலந்து கொள்ளும் அக்கட்சியின் முதல் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இதுவாகும். இதை கருத்தில் கொண்டு, கூட்டத்தில் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Comments