இப்பவே கண்ண கட்டுதே..டிக் டாக் காதலன்.... பியர்கிரில்ஸ் காதலி
டிக்டாக்கில் வெளியிட்ட கிளாமர் வீடியோவால் மிரண்டு ஓடிய காதலனை எம்.எஸ்.சி பட்டதாரி பெண் ஒருவர் ஊர் ஊராக தேடிவருகிறார்.
வாட்ஸ் ஆப்பில் மோதிக்கொண்ட விஜய் ரசிகர் அஜீத் ரசிகை இடையே மலர்ந்த காதல் டிக்டாக்கால் கந்தலான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
செல்லப்பிராணி சகவாசம் மட்டுமல்ல டிக்டாக் சகவாசமும் உடையை கிழிக்கும்..! என்பதற்கு பல சம்பவங்கள் சாட்சியாக நிகழ்ந்து வருகின்றது.
அந்தவகையில் டிக்டாக்கில் வெளியிட்ட கிளாமர் வீடியோவால் காதலனை பிரிந்து தவித்து வருகிறார் சோழ மண்டலத்தை சேர்ந்த அஜீத் ரசிகை திவ்யா..!
சாதிபற்று மிக்க திவ்யா முகனூல், வாட்ஸ் ஆப், டிக்டாக், லைக் ஆப், ஹலோ ஆப் தொடங்கி தெருமுனையில் உள்ள பெட்டிக்கடை வரை கணக்கு வைத்துள்ளார்..!
எம்.எஸ்.சி பட்டதாரியான திவ்யாவின் அழகில் மயங்கி மனதை பறி கொடுத்தவர் தளபதி ரசிகரான பாண்டிய நாட்டை சேர்ந்த கார்த்தி..!
வாட்ஸ் ஆப்பில் யாருடைய நாயகன் பெரியவர் என்று மோதிக்கொண்ட இருவரும் காதலர்கள் ஆனது தான் திவ்யா கதையின் டுவிஸ்ட்..!
தன்னை ஒரு டிக்டாக் சிம்ரனாக நினைத்து வீடியோக்களை பதிவிட்டு வந்தவர், சற்று கிளாமராக வீடியோ பதிவிட்டு டிக்டாக் உறவுகளை உறைய வைத்தார்
காதலன் கார்த்தியுடன் 3 வருடம் சிறகடித்து பறந்த இந்த காதல் பறவையின் சிறகுகளை டிக்டாக் வீடியோ கருக்கியது. விட்டால் போது என்று காதலை முறித்து ஓட்டம் பிடித்தான் கார்த்தி
காவல் நிலையங்களுக்கு அழைத்து சமரசம் பேசியும் காதலியை சாதி மறுப்பு திருமணம் செய்ய மனமில்லாமல் தலைமறைவானார் அந்த காதல் போராளி. இதனால் விரக்தி அடிந்தார் திவ்யா
காடுகளில் சுற்றித்திரியும் பியர்கிரில்ஸ் போல எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று காவல் நிலையங்களுக்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் சென்று மனு கொடுத்து விட்டு கடற்கரையிலும், பேருந்து நிலையங்களிலும் காதலனை தேடி வீடியோவாக பதிவிட்டு வருகின்றார்..!
ஒரு கட்டத்தில் காதலன் கார்த்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடலில் குளித்துவிட்டு மாதாவிடம் ஜெபம் செய்ய போவதாக வீடியோ பதிவிட்டு பதில் கிடைக்கவில்லை
குளித்த பின்பு குளிரில் நடுங்கியபடியே காதலனுக்கு டிக்டாக்கில் மீண்டும் ஒரு வீடியோ பதிவிட்டார்
மிச்ச சொச்சமும் ... சொச்ச மிச்சமும் ...வீடியோவில் தோன்றி சாட்டிங் செய்து காதலை வளர்க்கும் பராமரிப்பில்லா கார்ப்பரேசன் பார்க்காக மாறிவருகின்றது இந்த டிக்டாக்..! என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!
Comments