மினியன் கார்ட்டூன் போன்று ஒற்றை கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி

0 1580

தாய்லாந்தில் மினியன் கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டி சுற்றுவட்டார மக்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது.       

அந்நாட்டின் சச்சோயெங்சாவோ மாகாணத்தில்(Chachoengsao) சோம்ஜாய் ஃபும்மான் (Somjai Phummaman) என்ற அரசு ஊழியர் வளக்கும் நாய், கடந்த ஞாயிற்றுகிழமை 2 குட்டிகளை ஈன்றது.

image

அதில் ஒன்று நெற்றியில் ஒரே ஒரு கண்ணுடனும் அதன் மேல் சிறிய வால் ஒன்றுடனும் வித்தியாசமான தோற்றத்தை இருப்பதை கண்டு ஆச்சரியமைடைந்த உரிமையாளர், அந்த நாய்க்குட்டிக்கு சைக்ளோப்ஸ் என்று பெயரிட்டு மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். ‘சைக்ளோப்ஸ்’ நாய்க்குட்டியை அதிர்ஷ்டமாக கருதும் அந்த பகுதி மக்கள், தங்கள் வாங்கும் லாட்டரி எண்களுக்கு அதன் பிறந்த தேதியைப் பயன்படுத்துகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments