பெட்ரோல் பங்க் மேலாளர் பட்டப்பகலில் கொலை
விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளரை நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்தவர்களை தேடி வரும் போலீசார், சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை பெட்ரோல் நிரப்ப ஒரு கார் வந்தது. காரில் இருந்து இறங்கிய நபர் பெட்ரோல் நிரப்புமாறும் உள்ளே சென்று தண்ணீர் அருந்திவிட்டு வருவதாகவும் பெட்ரோல் நிரப்பும் ஊழியரிடம் தெரிவித்துச் சென்றதாககக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெட்ரோல் நிலைய அலுவலகப் பகுதியில் சத்தம் கேட்டு அங்கு சென்றதாகக் கூறும் ஊழியர்கள், அங்கு புகை மண்டலமாக இருந்ததாகவும், மேலாளர் சீனிவாசனை அந்த நபர் சரமாரியாக கத்தியால் வெட்டிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். தங்களை நெருங்க விடாமல் அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறுகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரை காவல் அதிகாரி ஒருவர் தடுக்க முற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
Comments