முதலமைச்சர் குறித்து அவதூறு வழக்கில் சீமான் மீது, பிப்.18ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு

0 859

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் மீது வரும் 18ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சீமான், தமிழக அரசுக்கும், முதலமைச்சரின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.

சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு சீமான் இன்று நேரில் ஆஜராகினார். அப்போது அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கபட்டன. இதையடுத்து, சீமான் மீது வரும் 18ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments