நாடு தழுவிய அளவில் NRC அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை
நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை ((NRC)) அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அசாமில் வாழும் இந்திய மக்களை கண்டறியவும், சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய பிற நாட்டினர் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களை கண்டறிந்து வெளியேற்றவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
அதில் அசாமில் தற்போது வசிக்கும் சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் இல்லை. இந்நிலையில், அசாமை போல நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் ((Nityanand Rai)) எழுத்துமூலம் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் மத்திய அரசு இன்னும் அதுகுறித்து முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Comments