விவசாய நிலத்தில் கியாஸ் கசிவு - 41 மணி நேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டது
ஆந்திர மாநிலத்தில் விவசாய நிலத்தில் செல்லும் பைப் லைனில் ஏற்பட்ட கியாஸ் கசிவு, 41 மணி நேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பிடு கிராமத்தில் உள்ள ஒ.என்.ஜி.சி. நிறுவன கியாஸ் உற்பத்தி கிணறை கொல்கத்தா பி.எப்.எச். நிறுவனம் ஒப்பந்த முறையில் பெற்று கியாஸ் உற்பத்தி செய்கிறது.
அக்கிணறிலிருந்து விவசாய நிலம் வழியே செல்லும் பைப் லைனில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு வெளியேறத் தொடங்கியது. தகவலின்பேரில் மும்பையில் இருந்து ஓஎன்ஜிசி நிபுணர்கள் குழுவினர் வந்து அதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்
இன்னொரு இடத்தில் குழி தோண்டி, பைப் லைனுக்கு கியாஸ் வராமல் நிறுத்தினர். இதையடுத்து வேறு பைப் லைன் அமைத்து, அதில் கியாஸ் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Comments