பங்குச்சந்தைகளில் உயர்வுடன் நிறைவடைந்த வர்த்தகம்

0 1268

உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன.

வர்த்தக நேர முடிவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 917  புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 789 புள்ளிகளாக இருந்தது.

டைடன் நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 7 சதவீதமும், அடுத்தபடியாக ஐடிசி, பஜாஜ் பினான்ஸ், ஹெச்டிஎப்சி, ஹீரோ மோட்டோகார்ப், டாட்டா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3 முதல் 4 சதவீதம் வரையிலும் உயர்ந்தன.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 271 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 979 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. பட்ஜெட் தாக்கலுக்கு பிந்தைய மீட்சி, கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments