அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்திற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

0 1415

இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திரன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி பேசியது தனிப்பட்ட கருத்து என்றும், அது அதிமுகவின் கருத்தாக இல்லாத பட்சத்தில் ஆளுநரிடம் எப்படி முறையிடலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காகவே டி.என்.பி.எஸ்.சி.யைக் கண்டித்து திமுக இளைஞர் அணி அணி போராட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறினார். முன்னதாக பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாணவர்களின் ஐக்யூ நிலை அதிகமாக உள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments