வங்கதேசத்தவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் இல்லையேல், தூக்கி வீசப்படுவீர்கள் என எம்என்எஸ் போஸ்டர்
நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தவர்கள் இந்தியாவை விட்டு உடனடியாக தாங்களாவே வெளியேற வேண்டும் என்றும், இல்லையென்றால், தங்கள் பாணியில் தூக்கி வீசப்படுவீர்கள் என்றும் கூறி, மும்பையில், மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எம்என்எஸ் ஆதரிக்காவிட்டாலும், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்துள்ள வங்கதேசத்தவர்களை வெளியேற்றும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்ரே அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், மும்பை பான்வேல்((Panvel)) பகுதியில், ராஜ்தாக்ரே, அவரது மகன் அமித் ஆகியோரின் புகைப்படங்களுடன், இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Comments