தஞ்சை பெரிய கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு...

0 1416

தஞ்சை பெரியக்கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரள்வதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

image

தஞ்சை பெரிய கோவிலில் நாளை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கிய நிலையில், யாக சாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி மாலை தொடங்கியது. நேற்று 5ம் கால யாகசாலை பூஜை நடைபெற்ற நிலையில், அதனை காண திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இன்று கோவிலில் காலை 6ம் கால யாக சாலை பூஜையும், மாலையில் 7ம் கால யாக சாலை பூஜையும் நடைபெற இருக்கின்றன.

யாகசாலை பூஜையினை காண வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே பூஜை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 5ம் கால யாகசாலை பூஜையினை காண நேற்று திரளான பக்தர்கள் வந்திருந்த நிலையில், இன்றும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்த நிலையில் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், நகர் முழுவதும் சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக 250க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments