டெக்சாஸ் பல்கலைக் கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு - 2 பெண்கள் பலி

0 1067

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

காலேஜ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக் கழக வளாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பல்கலைக் கழக விடுதிகளில் ஏராளமானோர் தங்கியுள்ள நிலையில், திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. அந்த இடத்திற்கு விடுதி மாணவர்கள் சென்று பார்த்தபோது 2 பெண்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

image

2 வயது குழந்தை ஒன்று காயத்துடன் இருந்ததைக் கண்டு அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலையாளி யார் எனத் தேடி வருகின்றனர். இறந்தவர்கள் மாணவிகளா என்ற விவரம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments