ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு இன்று விசாரணை

0 836

அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்ச நீதீமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments