முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்...
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு கூடும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழக பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Comments