30 கோடிப் பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவிப்பு

0 1325

நாடு முழுவதும் 30 கோடிப் பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிரந்தரக் கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதித்துணை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி 30 கோடியே 75 லட்சம் பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

17 கோடியே 58 லட்சம் பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments