தமிழ் கடவுளுக்கு.. சத்திய சோதனை..! யோகிபாபுவுக்கு வலுக்கும் கண்டனம்

0 2797

காக்டெய்ல் என்ற படத்திற்காக தமிழ் கடவுள் முருகப்பெருமான் போல வேடமணிந்து யோகிபாபு நடித்துள்ள நிலையில், தமிழ் கடவுளை அவமதித்து விட்டதாகக் கூறி யோகிபாபுவுக்கு எதிராக பலத்த கண்டனக் குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது.

அருணகிரி நாதர் படத்தில் முருகப்பெருமான் தோன்றிய இந்த காட்சியை அன்று பிரமிப்பாக பார்க்கப்பட்டது.

கந்தன் கருணையில் சிவகுமார் முருகப்பெருமான் வேடம் பூண்டபோது ரசிகர்கள் அகம் மகிழ்ந்தனர்.

கமல் ஹாசனின் காதலா காதலா உல்ளிட்ட இன்னும் ஏராளமான சினிமாக்களில் முருகப்பெருமானை அழகின் மறுவடிவமாக காட்டி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் யோகிபாபுவின் தர்மபிரபு படத்தில் நகைச்சுவை என்ற பெயரில் நடிகர் மொட்டை ராஜேந்திரனை சிவபெருமான் வேடத்தில் நடிக்க வைத்தனர்.

அதன் நீட்சியாக விரைவில் வெளியாக உள்ள காக்டெய்ல் என்ற படத்தின் போஸ்டரில் யோகிபாபுவே முருகப்பெருமான் போல கையில் வேலுடன் தோன்றி இருப்பது ரசிகர்களை கடும் கோபமடைய செய்துள்ளது

தமிழ் கடவுள் முருகனை யோகிபாபு அவமதித்து விட்டதாக பல்வேறு இந்து அமைப்பினர் கண்டன குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர். சினிமா தானே என்றாலும் தமிழ் திரை உலகில் தொடர்ந்து இந்து கடவுளர்களை கேலிப்பொருளாகவே சித்தரிக்கும் போக்கு நீடிப்பதால் இந்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக கூறப்படுகின்றது.

வரம் கொடுத்த சிவனின் தலையில் கைவைப்பது போல இந்துக்களின் மத நம்பிக்கையை நகைப்புக்குரியதாக மாற்றியதோடு, தமிழ் கடவுள் முருகனை கேலிக்குரியதாக்கி, சித்தரித்துள்ள காட்சிகளை படத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் யோகி பாபுக்கு எதிராக இந்து ஜனநாயக முன்னணி அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் யோகி பாபு, படத்தை தயாரித்துள்ள உஸ்மான் பஹீத் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த படத்தை தடை செய்து, அவர்கள் மீது மதத்தை இழிவுபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments