சுட்டுகொல்லப்பட்ட குற்றவாளியின், 1 வயது பெண்குழந்தையை தத்தெடுத்த காவல்துறை அதிகாரி
உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்ததால் சுட்டுக் கொல்லப்பட்டவனின் ஒரு வயது பெண்குழந்தையை காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தத்தெடுக்க உள்ளார்.
பரூக்காபாத் மாவட்டத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்துக் கொண்டு தலா ஒரு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டு மிரட்டல் விடுத்தவனை, 10 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அம்மாநில போலீசார் சுட்டுக் கொன்று குழந்தைகளை மீட்டனர். தொடர்ந்து அவனது மனைவியும் கிராம மக்கள் தாக்கியதில் உயிரிழந்தார்.
இதையடுத்து ஆதரவின்றி நிர்க்கதியாக நிற்கும் அவர்களது ஒருவயது நிரம்பிய பெண் குழந்தையை, கான்பூர் மண்டல காவல்துறை தலைவர் மோகித் அகர்வால் தத்தெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
குழந்தை கவுரியை தம்மை போல் ஐபிஎஸ் அதிகாரி ஆக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments