தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை முன்னிட்டு செவ்வாய்கிழமை முதல் 6-ம் தேதி வரை, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்லும் ரயில் நண்பகல் 12.10-க்கு புறப்படும் எனவும், தஞ்சையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ரயில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், தஞ்சையிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலானது காலை 9.45-க்கும், மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை செல்லும் ரயில் பிற்பகல் 3.20-க்கும் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு செல்லும் ரயில் இரவு 9.55-க்கும், திரூவாரூரிலிருந்து தஞ்சைக்கு திரும்பும் ரயில் அதிகாலை 4.15-க்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காரைக்காலிலிருந்து தஞ்சை செல்லும் ரயில் காலை 9.30-க்கும், தஞ்சையிலிருந்து காரைக்கால் திரும்பும் ரயில் பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments