பன்றிக்காய்ச்சல் பீதி... மின்சார வேலி அமைத்து நடவடிக்கை
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பீதியால் ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் ஜெர்மனிக்கு இடையே 120 கிலோ மீட்டருக்கு மின்சார வேலி போடப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பன்றி ஏற்றுமதி செய்வதன் மூலம் ஜெர்மனி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிவருகின்றனர். இந்த நிலையில் போலந்தில் காட்டுப்பன்றி ஒன்றுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவல் ஜெர்மனி விவசாயிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி பன்றி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பட்சத்தில் ஜெர்மனி மட்டுமின்றி அந்த நாட்டுக்கு பன்றிக்குட்டிகள் வழங்கும் நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்படும். இதனால் போலந்தில் இருந்து ஜெர்மனிக்குள் காட்டுப்பன்றிகள் நுழையாத வண்ணம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Comments