காக்னிசண்ட் நிறுவனம் கட்டிடங்களுக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாக புகார் ! பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1328

காக்னிசன்ட் நிறுவன கட்டிடத்துக்கு அனுமதி பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரிக்க கோரிய மனு மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிடிஎஸ் நிறுவனம், சென்னை மற்றும் புனேவில் அலுவலகம் கட்ட அனுமதி பெறுவதற்காக இரு மாநில அரசு அதிகாரிகளுக்கு 29 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக கூறி மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த முறைகேடுகளில் தமிழகம் மற்றும் மராட்டிய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மார்ச் 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments