பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த வர்த்தகம், முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து, 39 ஆயிரத்து 872 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 46 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 707 புள்ளிகளில் நிலை கொண்டது.
சிகரெட்டுக்கு கலால் வரி அதிகரிப்பு என்ற பட்ஜெட் அறிவிப்பால், ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் விலை அதிக அளவில் சரிந்து, அதிக சந்தை மதிப்பு கொண்ட முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறி இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து, 71 ரூபாய் 33 காசுகளாக இருந்தது.
Comments