இம்ரானின் பாக்,. அணியை நினைவூட்டும் இந்திய அணி.. கோலிக்கு மஞ்ச்ரேக்கர் பாராட்டு

0 948

நியூசிலாந்தில் நடைபெற்ற்று முடிந்துள்ள டி20 தொடரின் போது கோலியின் செயல்பாடுகள், பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் இம்ரான்கானை நினைவூட்டுவதாக இருந்தது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் புகழ்ந்துள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக வென்றது. நியூசிலாந்து அணியின் எழுச்சியால் மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகள் இரண்டுமே சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது.

மூன்றாவது போட்டியின் சூப்பர் ஓவரில் கடைசி இரு பந்துகளில் ரோஹித் அடித்த இரு சிக்சர்களால் கடைசி நிமிடத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டியின் சூப்பர் ஓவரில் ராகுல் முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அவுட்டானார். பின்னர் கோலி 2 ரன்கள் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்ய விரும்புவதாக கோலி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. இந்நிலையில் 5-வது டி20-யில் இலக்கை விரட்டிய நியூசி அணியை, இறுதி கட்டத்தில் கட்டுப்படுத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதல் இரு போட்டிகளை தவிர, மற்ற 3 போட்டிகளிலும் அழுத்தத்திற்கு இடையே சிறப்பாக செயல்பட்டு வென்றது இந்தியா.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் இந்தியாவின் வெற்றி, கோலியின் கேப்டன்சி, கே.எல்.ராகுலின் திறமை உள்ளிட்டவற்றை பாராட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மஞ்ச்ரேக்கர் தனது ட்விட்டர் பதிவில், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் விராட் கோலியின் கீழுள்ள இந்திய அணியை பார்த்தால் இம்ரான் கானின் கீழ் விளையாடிய பாகிஸ்தான் அணி நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் அடிக்கடி தோற்கும் நிலையில் இருந்தாலும், இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அணி பல்வேறு வழிகளில் முயற்சித்து இறுதியில் வெற்றியை ருசிக்கும். தன்னம்பிக்கை வலுவாக இருக்கும் போது தான் இந்த மாதிரியான வெற்றி கிடைக்கும் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த டி20 தொடர் மூலம் சிறந்த பேட்ஸ்மேன் கீப்பராக அடையாளம் காணப்பட்டுள்ளார்., மிகவும் திறமைசாலியான கே.எல்.ராகுல் என பாராட்டியுள்ளார் மஞ்ச்ரேகர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments