நாக்பூர் அருகே ‘பாபநாசம்’ பட பாணியில் நடைபெற்ற கொலை சம்பவம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாபநாசம் பட பாணியில் நடைபெற்ற கொலை தொடர்பாக ஓராண்டுக்கு பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக்பூர் கப்சி பகுதியில் உணவகம் நடத்தி வரும் லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் என்பவனுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த பங்கஜ் திலிப் கிரம்கர் என்பவரது மனைவிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த கிரம்கர் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த போதும், அவர்களது பழக்கம் நீடித்ததால் தாக்கூரின் கடைக்கே நேரில் சென்று எச்சரித்துள்ளார். அப்போது தாக்கப்பட்டதில் உயிரிழந்த கிரம்கரின் உடலை டிரம்மில் வைத்து, ஊழியர்களின் உதவியுடன் உணவகத்தின் பின்புறம் குழிதோண்டி 50 கிலோ உப்புடன் சேர்த்து புதைத்த தாக்கூர், பாபநாசம் பட பாணியில் அவரது செல்போனை ராஜஸ்தான் சென்ற லாரியில் வீசியெறிந்துள்ளார்.
கிரம்கரின் இருசக்கரவாகனத்தையும் அவருடன் சேர்ந்து புதைத்துள்ளார். கிரம்கர் மாயமானதாக குடும்பத்தினர் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆதாரங்களை திரட்டி தாக்கூர் உள்ளிட்ட மூவரை கைது செய்து துருவித் துருவி விசாரித்ததில் கிரம்கரை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
Comments