கள்ளக்குறிச்சியில் வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கள்ள சாவி கொண்டு திருடிய சம்பவம்

0 990

கள்ளக்குறிச்சியில் வங்கி முன்பு நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடி செல்லப்பட்ட சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

அடுத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒருவன் சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துவிட்டு, யாரும் கவனிக்காத சமயத்தில் தான் வைத்திருந்த திருட்டு சாவியை கொண்டு மிக எளிதாக வண்டியின் சைட் லாக்கை திறந்துள்ளான். மீண்டும் தன்னை யாரேனும் கவனிக்கிறீர்களா என வேடிக்கை பார்த்துவிட்டு, அடுத்து வாகனத்தின் மெயின் லாக்கையும் திறந்துள்ளான்.

இதையடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தொப்பியை மாட்டிக்கொண்டு, அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து வண்டியில் அங்கிருந்து சென்றுள்ளான். இதுதொடர்பான புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments