கூகுள் மேப்பை ஏமாற்றிய ஜெர்மன் ஓவியர்

0 1798

99 ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா போன்களையும் ஒரு தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார்.

இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும் டிராபிக் நெரிசலைக் குறிக்கும் சிவப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றின.

பச்சை நிறத்தில் காணப்பட்ட பெர்லின் சாலைகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மேப் உபயோகிப்பாளர்கள் திகைத்தனர். சைமன் வெக்கெர்ட் (Simon Weckert) என்ற இந்த ஜெர்மன் ஓவியர் எதற்காக கூகுள் மேப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments