பெரிய கோவில் குடமுழுக்கு: இன்றிரவு முதல் 250 சிறப்பு பேருந்துகள்
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செல்ல, இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் உள்ள குறுங்காளீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர், முன்னதாக கோவிலில் நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கார், தஞ்சைக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அந்தந்த பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments