பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து ! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

0 1042

பேரறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

அதேபோல் கீழ்ப்பாக்கம் பாதாளபொன்னியம்மன் கோவிலில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பாரிமுனை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவிலில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளிலும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments