தென் அமெரிக்காவில் காளை சண்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நடக்கவுள்ள காளை சண்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டு தலைநகர் போகோடாவில் காளைச்சண்டைக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை, கலை வெளிப்பாட்டுக்கான உரிமை என்று கூறி நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் காளை சண்டை நடைபெறவுள்ள சாண்டா மரியா மைதானத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காளைகளின் இரத்தத்தை உருவகப்படுத்தும் வகையில் சிவப்பு பொடி தூவி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Comments