தர்பார் படம் நஷ்டம்..? விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் உதவி செய்வோம் - அமைச்சர் கடம்பூர்ராஜு

0 1830

தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்ததாகக் கூறும் விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு தீர்வு கிடைக்க அரசு வழிகாட்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் அரசே ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், தர்பார் படம் நஷ்டம் என வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், நஷ்டமைந்ததாகக் கூறும் விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால், அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று முறையிட்டு தீர்வு காண்பதற்கு அரசு வழிகாட்டி உதவும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments